தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட வெடி குண்டுகள்: விசாரணையில் காவல்துறை
Sri Lanka Police
Batticaloa
Sri Lankan Peoples
By Dilakshan
மட்டக்களப்பு (Batticaloa) - கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரலக்குளம் முற்றும் அம்பவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்து கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி; ரக குண்டு ஒன்று உட்பட இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கை குண்டுகள் இன்று (12) கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம், குறித்த இரு பிரதேசங்களின் காட்டை அண்டிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு குண்டுகள் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், மீட்கப்பட்ட குண்டுகளை நீதிமன்ற அனுமதியை பெற்று செயலிழக்க செய்யும் நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு, குண்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்