இந்தியாவிலிருந்து வந்த இருவர் மன்னாரில் கைது
arrest
stf
herion
mannr
By Sumithiran
கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் மன்னார் பேசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் இன்று (12) கடல் மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் மன்னார் முகாமிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33-45 வயதுடையவர்கள் எனவும், மன்னார் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
