பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதல்: குழந்தைகள் இருவர் பலி - பலர் காயம்
London
United Kingdom
Crime
Death
By Thulsi
பிரித்தானியாவில் (united kindom) இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (29.7.2024) பிரித்தானியாவின் - சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிறுவர் நடனப் பட்டறையின் போது இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தலைமை அதிகார் செரீனா கென்னடி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதச் செயல் அல்ல
அங்கு மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கத்திக்குத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது பயங்கரவாதச் செயல் அல்ல என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி