கொழும்பில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீன நாட்டவர் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சுங்க வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12,000 சிகரெட்டுகளுடன் இரு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு (18.08.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை வைத்திருந்த 31 மற்றும் 34 வயதுடைய சீன நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சிகரட்டுக்கள்
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த எண்ணிக்கை 12,000 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிகரெட்டுகள் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, அவற்றை யாரிடம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது மற்றும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நபர்கள் உள்ளனரா என்பது தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |