இடிமின்னல் தாக்கியதால் இருவர் மயக்கம்!
Batticaloa
lightning strike
Unconscious
Electrical goods
By MKkamshan
இடிமின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்ப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வழமைபோன்று இருந்தவேளை திடீரென ஏற்பட்ட இடிமின்னல் தாக்கத்தால் தாங்கள் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் பின்னர் தங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்று பாதிக்க்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களது வளவினுள் உள்ள தென்னை மரங்களில் இடிமின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் வீட்டில் இருந்த மின்சாரப் பொருட்கள் மற்றும் வீட்டு மின்னினைப்புக்கள் என்பன சேதமுற்றுள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி