எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் மாயம்
எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்களை காணவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நாட்டை பாதித்துள்ள நிலையில் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் கடலுக்கு சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு செல்லவேண்டாம்
இதேவேளை, தற்போது நிலவும் கடும் காற்று காரணமாக இன்றும் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும்
கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியின் காரகல பிரதேசத்தில் அதிகளவான மழை (143.3 மி.மீ.)பதிவாகியுள்ளது இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |