சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது செய்யக்கூடாதவை
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன.
அன்றைய தினத்தன்று , நம்முடைய முன்னோர்கள், விண்ணிலிருந்து, மண்ணிற்கு வருகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
எனவே, அமாவாசை தினத்தில் சில காரியங்களை துவங்குவது நன்மையாகவே கருதப்படுகிறது.
யாரையும் வணங்க கூடாது
முன்னோர்கள், பித்ருக்கள் இந்த ஒருநாளில் மட்டுமே வீட்டிற்கு வருவதால், முறையாக வழிபட வேண்டும்.
அதனால்தான் அன்றைய நாளில், முன்னோர்களை தவிர இந்த நாளில் வேறு யாரையும் வணங்க கூடாது, எண்ணெய் தேய்க்கக்கூடாது என்பார்கள்.
அதிலும், வெள்ளிக் கிழமையில் அமாவாசை வந்தால், பித்ரு பூஜை முடிந்த பிறகுதான், வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டுமாம்.
எனவே நல்ல காரியங்கள் எதுவானாலும், அமாவாசையில் பித்ரு பூஜை முடித்த பிறகு செய்வதால், கூடுதல் பலன் கிடைக்குமாம்.
வீட்டு வாசலிலும் முன்னோர்கள்
அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம்.
அதனால்தான் அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது என்கிறார்கள்.