ஜப்பானில் இரண்டு ஹெலிகொப்டர்கள் கடலில் விழுந்தன
பசிபிக் பெருங்கடலில் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய கடற்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டையே உலுக்கி இருக்கும் இந்த ஹெலிகொப்டர் விபத்து நேற்று (20) நள்ளிரவு நடந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி
டோக்கியோவிற்கு தெற்கே 600 கிமீ (372 மைல்) தொலைவில் உள்ள இசு தீவுகளுக்கு அருகே இரட்டை என்ஜின் மிட்சுபிஷி SH-60K கள் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை என பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார். "முதலில் உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்," என்று கிஹாரா கூறினார்.
ஹெலிகொப்டர்கள் "இரவில் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்ப்பதற்கான பயிற்சிகளைச் செய்கின்றன" என்று கூறினார்.
வேறொரு நாட்டின் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை
ஒரு வீரர் நீரில் இருந்து எடுக்கப்பட்டார், ஆனால் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
டோரிஷிமா தீவில் உள்ளூர் நேரப்படி 22:38 மணிக்கு (14:38 BST) ஒரு ஹெலிகொப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக NHK ஒளிபரப்பு தெரிவித்துள்ளது. ஒரு நிமிடம் கழித்து இந்த விமானத்தில் இருந்து அவசர சமிக்ஞை கிடைத்தது. 25 நிமிடங்களுக்குப் பிறகு, அதே பகுதியில் மிட்சுபிஷி SH-60K என்ற மற்ற ஹெலிகொப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை இராணுவம் உணர்ந்தது.
அருகிலுள்ள கடற்பரப்பில் வேறு எந்த விமானங்களும் கப்பல்களும் இல்லாததால், இந்த சம்பவத்தில் வேறொரு நாட்டின் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று ஜப்பானிய கடற்படை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |