கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்தியர்கள்! மறைத்து வைக்கப்பட்ட பொதியில் இருந்தது என்ன?
health
sri lanka
people
By Shalini
சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான அனுமதி இல்லாமல், சில நோய்களுக்கான மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் தனிப்பட்ட கைப்பைகளில் இந்த மருந்துகளின் தொகுதி மறைத்து வைக்கப்பட்டமை சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பைகளில் பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 10 வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.