திருகோணமலையில் கோர விபத்துக்குள்ளான வான்! இருவர் படுகாயம்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் வைத்து சிறிய ரக வான், மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் , வானில் பயணித்த வவுனியா - பட்டாணிச்சூடு பகுதியைச் சேர்ந்த 35, 17 வயதுகளையுடைய இருவரே படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வானின் சாரதியின் தூக்க களக்கத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்