வீடொன்றில் மர்மமாக உயிரிழந்து கிடந்த நபர்! விசாரணைகள் தீவிரம்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கொஸ்கொட காவல்துறை பிரிவின் பொரலுகெட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பல நாட்களாக அந்த வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், வீட்டை சோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்போது, வீட்டின் உரிமையாளர் தரையில் சடலமாகக் கிடப்பது அவதானிக்கப்பட்டதையடுத்து, கொஸ்கொட காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அதனைத் தொடர்ந்து, எல்பிட்டிய குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைப் பரிசோதித்துள்ளனர்.

பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்