தம்பதியொன்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு: கணவர் பலி!
புதிய இணைப்பு
ஹிக்கடுவை, குமாரகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருமணமான தம்பதியினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவரும் காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட் நிலையில் கணவர் உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஹிக்கடுவை, குமாரகந்த பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் முன் நின்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
