கனடாவில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்:இருவர் காயம்
கனடா (Canada) - டொரன்டோவில் (Toronto) பேருந்து ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது பெரி மற்றும் பார்க் லொவன் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
ரீ.ரீ.சீ போக்குவரத்து சேவையின் பேருந்து ஒன்றிலேயே இவ்வாறு கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்து தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த பேருந்தில் இரண்டு ஆண்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டவர்கள் இருவரும் தெரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 8 மணி நேரம் முன்
