இலங்கை 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண அணியில் யாழ்ப்பாண இளைஞர்களும் இணைப்பு
வரவிருக்கும் ஆசியக்கிண்ண ஆண்கள் U-19 அணியில் (50 ஓவர்) பங்கேற்க 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்த அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே யாழ்ப்பாண வீரர்
இதன்படி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுளன் மற்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இருவருமே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களாவர்.

ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட அணியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் இணைக்கப்பட்டு பின்னர் தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார். அத்துடன் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி, யாழ்ப்பாணத்தின் கிரிக்கெட் பெருமையைக் கொண்டு சென்றவர்.
சிறிலங்கா கிரிக்கெட் தகவலின்படி அணி டிசம்பர் 10, 2025 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படும். இலங்கை அணி நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து B குழுவில் இடம்பெற்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |