வாரியப்பொல - நாரம்மல பகுதியில் விபத்து : இருவர் ஸ்தலத்தில் பலி
குருநாகல் - வாரியப்பொல, நாரம்மல பகுதியில் லொறி ஒன்று கவிழ்ந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (12.04.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 மற்றும் 42 வயதுடைய லொறியின் சாரதி மற்றும் அதன் உதவியாளரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
அத்துடன் குறித்த லொறி புத்தளம் - ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுப்பொத்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |