காலை இடம்பெற்ற கோர விபத்து: கர்ப்பிணிப் பெண் படுகாயம்: இருவர் பலி
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் கர்ப்பிணிப் பெண் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அனுராதபுரம் - மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இந்த கோர வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலதிக விசாரணை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற "சிசு சரிய" பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பயணித்துள்ளதுடன், விபத்தின் போது இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலன்னறுவை பகுதியிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளதுடன், விபத்து ஏற்படும் போது மற்றொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அனுராதபுரம் போக்குவரத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |