இலங்கை ஏற்பட்டுள்ள இரண்டு பெரும் நெருக்கடிக்கள்! உதவி வழங்க கோரிக்கை
Corona
UN
SriLanka
Express Pearl
By Chanakyan
இலங்கை ஒரேவேளையில் இரண்டு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றால் இலங்கை ஒரேவேளையில் இரண்டு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டும்.
இலங்கையின் பலம் மற்றும் மீள் எழுச்சி பெறும் திறன் ஆகியவற்றை எதிர்பார்க்கும் அதேவேளை உலகில் உள்ள இலங்கையின் சகாக்கள் உடனடி உதவிகளை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்