யாழில் அபாயகரமான ஆயுதங்களுடன் இருவர் கைது!
வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவறுற்றை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவர்களின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாலி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |