தென்னிலங்கையில் மீட்கப்ட்ட இரு ஆண்களின் சடலங்கள்
கொழும்பின் (Colombo) இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கொழும்பு கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட இங்குருகடே சந்திக்கருகில் உள்ள ஜாடி வாவியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள்
காவல்துறையினருக்கு பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கறுப்பு நிற அரைக் காற்சட்டையும் மற்றும் கறுப்பு நிற மேற்சட்டையும் அணிந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனுடன், தெஹிவளை காவல் பிரிவுக்குட்பட்ட சிறிவர்தன வீதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 23 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று கால்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
