நாட்டில் மேலும் இரு சிறைச்சாலைகள்! நீதி அமைச்சர் தெரிவிப்பு
Sri Lanka Police
Batticaloa
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka Police Investigation
Prison
By Kathirpriya
அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
தற்போது 32 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலையில் உள்ளனர்,அவர்களில் 13,000 கைதிகளுக்கு போதுமான இட வசதி மட்டுமே சிறைச்சாலைகளில் காணப்படுகின்றது.
இதனால் ஹெந்தலையிலுள்ள தொழுநோயாளர் வைத்தியசாலையின் சில கட்டடங்களும், மட்டக்களப்பில் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை கட்டடமும் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன என அமைச்சர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்