ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய மேலும் இரண்டு இலங்கையர் பலி
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுவரும் போரில் பங்கெடுக்க ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபட்ட இலங்கையர்கள் இருவர் உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்ய இராணுவத்தின் துணை சேவைகளில் வேலை வழங்கும் போர்வையில் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு (10) இலங்கையர்கள் ரஷ்ய முன்னரங்கப் பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ வாகன தொடரணி தாக்குதல்
உக்ரைன் எல்லையில் உக்ரைன் ராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இந்த இரு ராணுவ வீரர்கள் உட்பட பல ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ வாகன தொடரணி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதல் இடம்பெற்ற போது அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் தனது வீட்டிற்கு (11) இதனை தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்கள் மற்றும் இந்த தகவலை இலங்கைக்கு வழங்கியவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கணிசமானோர்
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கணிசமானோர் ரஷ்யாவிற்கு ஆதரவு சேவைக்காக அழைத்துச் செல்லப்பட்டு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு இராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தலை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் முகவர்கள் குறித்த பல தகவல்களை ரஷ்ய ராணுவம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அளித்துள்ளது. கூலித் தொழிலாளிகளாக பணிபுரியும் ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ வீரர்கள் பாரிய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் தப்பிச் செல்ல முடியாமல் திரும்பி வந்தால் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |