போதை மாத்திரை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது
arrest
police
jaffna
By Vanan
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ். புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பிரகாரம், புலனாய்வுப் பிரிவினர் இரு கார்களை அடையாளம் கண்டு அவற்றைச் சோதனையிட்ட போது, அவற்றுள் இருந்து பெருமளவான போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
இதன்போது, இரு சொகுசுக் கார்களை கையகப்படுத்தியதுடன், கார்களில் பயணித்த யாழ். நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும், கொழும்பைச் சேர்ந்த ஒருவரையும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், அவர்களின் இரு கார்களையும் யாழ். காவல்துறையினரிடம் கையளித்துள்ளதுடன், இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.