கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது: மில்லியன் பெறுமதியான பொருட்கள் மீட்பு
Bandaranaike International Airport
Dubai
Sri Lanka Police Investigation
Mobile Phones
By Laksi
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயில் (Dubai) இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு வந்தவர்களே இன்று (17) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு தொகை கையடக்க தொலைபேசி மற்றும் பென் ட்ரைவர்களை வரி செலுத்தாமல் கொண்டு வந்தமை விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
50 மில்லியன் ரூபா பெறுமதி
இரண்டு சந்தேகநபர்களும் 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 USB பென் டிரைவ்களை விமான நிலையம் மூலம் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்