இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு...! சாய்ந்தமருது காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிர் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (17-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக குறித்த காவல்துறையினர் பெற்றுள்ளனர்.

சாய்ந்தமருது காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது காவல் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் காவல்துறை பரிசோதகர் (இன்ஸ்பெக்டர்) ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |