வவுனியாவில் கஞ்சாவுடன் கைதான காவல்துறையினர்!
Sri Lanka Police
Vavuniya
Drugs
Arrest
By Abi
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைப் பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
குறித்த சந்தேக நபர்கள் விற்பனைக்காக கஞ்சாவினை கொண்டு சென்ற போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர்கள்
அதன் பின்னர், சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 970 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் இன்று (04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்