ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அநுர அரசின் நிலைப்பாடு
கொழும்பு (Colombo) மற்றும் கண்டியில் (Kandy) காணப்படும் இரு ஜனாதிபதி மாளிகைகளை தவிர்த்து அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஹோமகமவில் இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை
அதன்படி, அவற்றின் இருப்பிடம் மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் அவை எந்த நோக்கத்திற்கு ஏற்றவை என்பதை அரசாங்கம் மிக விரைவில் தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை இராஜதந்திர சந்திப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பெரஹெரா சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |