வவுனியாவில் இரு பாடசாலைகள் உடைத்து திருட்டு
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sathangani
வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம் மற்றும் ஆயிசா வித்தியாலயம் என்பவற்றிலே திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
பாடசாலைகளுக்குள் நுழைந்த திருடர்கள் பாடசாலைக் கதவுகளை உடைத்துள்ளதுடன், பாடசாலையில் இருந்த மோட்டர்கள், மின்விசிறிகள் என்பவற்றையும் கொண்டு சென்றுள்ளனர்.
வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு அரசுடன் கலந்துரையாடுவதே இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ்
குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தால் பூவரசன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்:சந்தேக நபர்கள் தப்பியோட்டம்(படங்கள்)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்