ஜப்பானில் கோர விபத்து - இலங்கையர் இருவர் பலி
Japan
By pavan
ஜப்பானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து கடந்த 12 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் நபரொருவர் வாகனத்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் மாத்தறையைச் சேர்ந்த 26 வயதான நிசால் சாருக்க மற்றும் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரஜித்த லக்மால் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள்
இந்த விபத்தில் மேலும் 2 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி