கிரிக்கெட் போட்டி பணிகளுக்காக சென்ற இரு மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்
பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின் ஏற்பாட்டு பணிகளுக்காக மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவர்கள் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (02.04.2026) காலை பல்லேகெல இராணுவ முகாமுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் போட்டியை பார்வையிட சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது
இது குறித்து மேலும் தெரியவருகையில், கண்டி- திகன பாதையில் உள்ள பல்லேகெல இராணுவ முகாமுக்கு முன்னால், திகனயிலிருந்து வந்த பேருந்துடன் இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் வாகனம் மோதியதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் 12 ஆம் வகுப்பு பாடசாலை மாணவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் (பிக் மேட்ச்) ஏற்பாட்டு பணிகளை செய்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தசம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பல்லேகெல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்