ஒரே இரவில் இரு வழிபாட்டுத் தலங்களில் திருட்டு - மாயமான சூடாமணி
ஒரே இரவில் இரண்டு வழிபாட்டுத் தலங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு கலஹா காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது
கலஹா நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலின் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
மோப்ப நாய்களின் உதவி
இதனைத் தொடர்ந்து, அதே இரவில் கலஹா, உத்தெல்தொட்ட பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குள் நுழைந்த நபர்கள், அங்கிருந்த கரகத்தில் வைக்கப்பட்டிருந்த சில சூடாமணிகளையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கலஹா காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் தடயவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விகாரையிலிருந்து திருடப்பட்ட சூடாமணிகளின் பெறுமதி சுமார் நான்கு இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளை கலஹா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |