இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka Police Investigation
By Sumithiran
சட்டவிரோதமான முறையில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த நாவல பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் அமர் வீதிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
போதைப்பொருள் கைது நடவடிக்கையின் போது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கைது நடவடிக்கையின் போது இந்த தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியர் ஒருவரின் பெயரில் போலி முத்திரை தயாரித்து
இவர்கள் இருவரும் குருநாகல் பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரின் பெயரில் போலி முத்திரை தயாரித்து நோயாளர்களுக்கு கிளினிக்கில் வழங்கிய புத்தகத்தில் வைத்தியர் கூறியவாறு வலிநிவாரணி மாத்திரைகளை பதிவு செய்து மருந்தகங்களில் பெற்று விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்