சீனக்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம் - ஹெலிகாப்டர்
அமெரிக்காவின் (America) போர் விமானம் ஒன்றும் மற்றும் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
தென் சீனக்கடல் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
ஏவுகணை விமானம்
இந்தநிலையில், உள்ளூர் நேரப்படி மதியம் 2.45 மணியளவில் அமெரிக்க ஏவுகணை விமானம் தாங்கிக் கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்த எம்எச் 60ஆர் சீ ஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கப்பலில், இருந்த மூன்று விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, பிற்பகல் 3:15 மணியளவில் எப்ஏ-18 எப் சூப்பர் ஹார்னெட் போர் விமானம் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரண்டு விமானிகள்
இந்த விபத்தில் சிக்கிய இரண்டு விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அடுத்தடுத்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விரைவில் சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் ஹெலிகாப்டரும் மற்றும் விமானமும் அடுத்தடுத்து தெற்கு சீனப்பகுதியில் விபத்துக்குள்ளாகியிருப்பது பல்வேறு கேள்விகளையும் மற்றும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்