இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில் நான்கு பேர் காயம்
மாவனெல்லை கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்க பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (31.09.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த வாகன விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு வாகனங்களின் கோர விபத்து
அரநாயக்க பகுதியில் இருந்து மாவனெல்லை நகரை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனெல்லை நகரிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தொடர்புடைய டிப்பர் லொறி, உரிய அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் வேனில் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மாவனெல்லை ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |