வர்த்தகரை கொலை செய்ய வந்தவர்கள் சிக்கினர்
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Jaso
கடவத்தை பகுதியில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை கைத்துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்களுடன் களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய ராகம சந்தியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைத்துப்பாக்கி,தோட்டாக்கள் மீட்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் சோதனை நடத்திய போது, சாரதி மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் 7 உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
