கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது!
Bandaranaike International Airport
Foreign Employment Bureau
By Kathirpriya
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எந்தவித சட்ட அனுமதியும் இன்றி சுற்றுலா விசாவின் கீழ் ஓமானுக்கு செல்வதற்காக வந்த நிலையிலேயே இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (17) காலை 09:25 மணிக்கு செல்லவிருந்த WY 372 விமானத்தில் பயணிப்பதற்கு முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சாவடிக்கு அருகில் செல்லும் பாதுகாப்பு வேலியினூடாக இரண்டு பெண்களும் ஊடுருவ முயற்சித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி