காவல்துறை அதிகாரி வேடத்தில் கொள்ளை - அதிரடி தேடுதலில் காவல்துறையினர்
Sri Lanka Police
Kalutara
By Dharu
காவல்துறை அதிகாரி போன்று நடித்து பணத்தை கொள்ளையிட்ட இருவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (16) களுத்துறை, கட்டுகுருந்த சந்திக்கு அருகில் உந்துருளியில் வந்த இருவர், காவல்துறை அதிகாரி என கூறிக்கொண்டு, வீதிக்கு அருகில் பேருந்துக்காக காத்திருந்த நபரை சோதனையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் கால் நடையாக கறுவா மற்றும் மிளகு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை

இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை தெற்கு காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி