முன்னாள் அரச தலைவரை சந்தித்த அமெரிக்க பிரதிநிதி
Srilanka
Joe Biden
United States
Chandrika Bandaranaike
Pep Kerry
By MKkamshan
முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரும் முன்னாள் செனட் உறுப்பினருமான பெப் கெரி (Pep Kerry) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள முன்னாள் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான விடயங்கள் பற்றி நட்புறவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயமாக பெப் கெரி இலங்கை வந்துள்ளதாக தெரியவருகிறது.
