எலோன் மஸ்க்கிற்கு பேரதிர்ச்சி : டெஸ்லா நிறுவனம் மீது தாக்குதல் : கொளுத்தப்பட்டன கார்கள்
அமெரிக்காவின்(us) லாஸ் வேகாஸில் உள்ள பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு(elon musk) சொந்தமான டெஸ்லா நிறுவனனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், பல டெஸ்லா கார்கள் தீப்பற்றிக் கொண்டிருக்கும் காட்சிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு உடை அணிந்த நபர் நடத்திய தாக்குதல்
இந்த சம்பவம் டெஸ்லா நிறுவனத்திற்கும் அதன் சொத்துகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் சேதப்படுத்தும் செயல்களின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது.
This level of violence is insane and deeply wrong.
— Elon Musk (@elonmusk) March 18, 2025
Tesla just makes electric cars and has done nothing to deserve these evil attacks. https://t.co/Fh1rcfsJPh
லாஸ் வேகாஸ் காவல்துறை வெளியிட்ட தகவலின் படி, கருப்பு உடை அணிந்த நபர் பல டெஸ்லா வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் மோலட்டொவ் காக்டெய்ல் (Molotov cocktail) மற்றும் துப்பாக்கி கொண்டு தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், குறைந்தபட்சம் 5 டெஸ்லா வாகனங்கள் சேதமடைந்து, அதில் 2 வாகனங்கள் முற்றிலும் தீப்பற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எலோன் மஸ்க் கடும் கண்டனம்
இந்த சம்பவம் குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது "பைத்தியக்காரத்தனமானது மற்றும் மிகவும் தவறானது" என்று கூறினார். டெஸ்லா மின்சார கார்களை தயாரிப்பதில் மட்டுமே ஈடுபட்டுள்ளது என்றும், அது "தீய தாக்குதல்களுக்கு" தகுதியானது அல்ல என்றும் மஸ்க் கூறினார். எலோன் மஸ்க் இந்த சம்பவத்தை "பயங்கரவாதம்" என்று அழைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்