காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு அமெரிக்காவே காரணம் -தலிபான் குற்றச்சாட்டு
airport
afghanistan
kabul
bomb blast
By Sumithiran
ஆப்கானின் காபூல் விமானநிலையத்தில் வெளிநாட்டவர் அதிகளவில் இருந்ததே குண்டுவெடிப்புக்கு காரணம் என்று தலிபான் குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாட்டவர் அனைவரும் வெளியேறி விட்டால் அதன் பிறகு காபூலில் ஒரு குண்டுகூட வெடிக்காது என்றும் தலிபான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கையால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் நிலையில் குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதுபற்றி அமெரிக்காவுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபியுல்லா முஜாயித் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி