இஸ்ரேலை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது : பைடன்
இஸ்ரேலை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது. மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்தையும் செய்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு திர் தாக்குதல்களால் பொதுமக்களைக் கொன்றதுடன், பெண்கள், குழந்தைகளை கடத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தன்னையும், மக்களையும் பாதுகாக்க உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது.
வலுவான ஆதரவு
பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒருபோதும் ஒரு சாக்குப்போக்கு இருக்க முடியாது, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு எனது நிர்வாகத்தின் ஆதரவு வலுவானது.
இஸ்ரேலுக்கு விரோதமான எந்தவொரு அமைப்பம் இந்த தாக்குதல்களை ஆதாயத்திற்காக பயன்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல. உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 11 நிமிடங்களுக்குப் பின் அமெரிக்கா அதை அங்கீகரித்துள்ளது என்றும், அந்த நிலை ஒருபோதும் மாறாது என்றும் பைடன் கூறினார்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்
