உத்திகவின் பதவி வெற்றிடத்திற்கு பதிலாக முத்துகுமாரன!
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன இன்றைய தினம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த பதவி வெற்றிடத்திற்கு எஸ்.சீ முத்துகுமாரன நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இன்று (27) தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
கூடுதல் வாக்குகள்
உத்திக்க பதவி விலகல் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் குசானி ரோஹானதீர தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளார்.
இதன்படி வேட்பாளர் பட்டியலில் உத்திக்கவிற்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்ற முத்துகுமாரன நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் ஆணைக்குழு இந்த பெயரை அங்கீகரித்ததன் பின்னர் முத்துகுமாரன பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |