உகண்டாவின் நிலை இலங்கைக்கும் -வெளிவந்த கடும் எச்சரிக்கை
srilanka
china
Sarath Fonseka
uganda
By Sumithiran
சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாகவும் உகண்டாவை போன்ற நிலைமை நாட்டுக்கு ஏற்பட உள்ளதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமையால் உகண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா கையகப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய திட்டமிடலொன்று இல்லாமல் சீனாவிடமிருந்து பாரியளவில் கடன் வாங்கும் ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் முறையற்ற முடிவே இதுவென சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்