பல்கலைக்கழகங்களில் ஆளணி வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி

Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Vanan May 27, 2023 10:06 AM GMT
Report

இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சார் பணியாளர் பற்றாக்குறை தொடர்பில் பல்கலைக்கழகங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதங்களுக்கு அமைவாக, பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கேற்ப பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளணி ஆட்சேர்ப்பு

பல்கலைக்கழகங்களில் ஆளணி வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி | Ugc Allows Filling Up Of Vacancies In Universities

அமைச்சரவைியின் அனுமதியின் படி, 2023 ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஓய்வுபெறும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்குச் சமமான தொகை ஆளணியை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும், 2023 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகும் அல்லது சேவை வறிதாக்குதலுக்கு உட்படுத்தப்படும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்காக 2023 ஆம் ஆண்டுக்கென உத்தேசிக்கப்பட்ட ஆளணி ஒதுக்கீட்டுக்குச் சமனான விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேநேரம், கடந்த வாரம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும், அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளைக் கரிசனையுடன் கேட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அவை குறித்து கவனம் செலுத்துமாறு தனது அதிகாரிகளுக்குப் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026