பிரித்தானியாவையே உலுக்கிய ஒற்றைப் புகைப்படம் - திகைத்துப் போயுள்ள மக்கள்!
பிரித்தானியாவில் அம்புலன்ஸ் சேவை வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
இவ்வாறான நெருக்கடியான சூழலில் 93 வயதான மூதாட்டி ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் மொத்த நாட்டு மக்களையும் உலுக்கியுள்ளது.
பிரித்தானியாவில் முதியோர் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த 93 வயதான எலிசபெத் டேவிஸ் என்பவருக்கு இடுப்பு எலும்பில் காயம் ஏற்பட்டு நகர முடியாமல் ஒருநாள் முழுவதும் வலியால் துடித்துள்ளார்.
வேலை நிறுத்தம்
ஆனால் அம்புலன்ஸ் சேவை வேலை நிறுத்தம் என்பதால், அவரை மருத்துவமனையில் சேர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது. அதுமட்டுமின்றி, எலும்பில் ஏற்பட்ட வலியுடன் 25 மணி நேரம் அவர் தரையில் படுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மூதாட்டி மட்டுமின்றி, அவரைப் போன்று வயதானவர்களும், அவசர சிகிச்சை நாடுவோரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை தலைவர்கள் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், அம்புலன்ஸ் சேவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் ஆபத்தில் சிக்க வேண்டாம் எனவும், தொழிற்சங்கங்களால் நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் அவதி
மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அம்புலன்ஸ் சேவையை மறுக்கும் ஆபத்தான போக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எலிசபெத் டேவிஸ் என்ற அந்த மூதாட்டி அவர் தங்கியிருந்த காப்பகத்தில் சனிக்கிழமை பகல் தவறிவிழுந்ததால் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் தான் மருத்துவமனை செல்லும் வகையில் அம்புலன்ஸ் சேவை கிடைத்துள்ளது. மேலும், படுக்கை ஒன்றிற்காக இன்னொரு 12 மணி நேரம் அவர் மருத்துவமனயில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மன்னிப்பு
சம்பவம் நடந்த அன்று அந்த மூதாட்டியின் மகனும் அந்த காப்பக நிர்வாகமும் குறைந்தது 10 முறை அம்புலஸ் சேவைக்காக தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளனர்.
தரையில் படுத்துக் கொண்டு, வலியில் அவதிப்பட்ட மூதாட்டியை பார்க்கவே பரிதாபமாக இருந்து என குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, குளிர்காலம் என்பதால் அதிகமானோருக்கு அம்புலன்ஸ் சேவை தேவை என்ற நிலை, மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை என பல காரணங்களால் உரிய நேரத்தில் சேவையை அளிக்க முடியவில்லை என அம்புலன்ஸ் சேவை நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.