இலங்கைக்கு வந்து குவியும் பிரித்தானியர்கள்
இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், 160,000 இற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள்
இந்தநிலையில், மொத்தம் மூன்று மில்லியன் வெளிநாட்டவர்கள் இலங்கை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் விமான பயண சீட்டின் விற்பனை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இலாபகரமான சந்தை
இந்தநிலையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை மிகவும் இலாபகரமான சந்தையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய மேலாளர் சிந்தக வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |