உக்ரைன் விவகாரம் - ரஷ்யா எடுத்துள்ள திடீர் முடிவு
பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் உட்பட்ட பிரித்தானிய அரசாங்க பிரமுகர்களுக்கு ரஷ்யா இன்று தடை விதித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் ரஷ்ய விரோத நடவடிக்கைகள் காரணமாக இந்த தடைவிதிக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் உக்ரைனிய நிலவரங்களை திட்டமிட்டு வேண்டுமென்றே மோசமாக்கி உக்ரைனுக்கு கொடிய ஆயுதங்களை வழங்குவதால் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், முன்னாள் பிரதமர் திரேசா மே, வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் உட்பட்ட பிரித்தானிய அரசாங்க உறுப்பினர்கள் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தடையை அறிவித்ததுடன், ரஷ்யாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரித்தானியாவின் கட்டுப்பாடற்ற அரசியல் பிரசாரம், ரஷ்ய பொருளாதாரத்தை நசிப்பதை நோக்கமாகக் கொண்டதெனவும் கண்டனம் செய்துள்ளது.
