ரணில் அரசை கண்காணிக்கும் பிரித்தானியா! நாடாளுமன்றில் பகிரங்கம்
சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்நிலை காப்பு சட்டத்தின் நடைமுறையை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்த நாட்டு வெளியுறவு மற்றும் பொதுநலவாய மேம்பாட்டுப் பணியகத்தின் அமைச்சர் ஆன் மேரி ட்ரெவெல்யன் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச இணைய சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட ஏனையவர்களின் கரிசனைகளிற்கு மத்தியில் இலங்கை நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலுடனான சந்திப்பு
கடந்த வருடம் தான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது, கருத்து சுதந்திரம் மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் மீது நிகழ்நிலை காப்பு சட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த கரிசனையை வெளியிட்டிருந்ததாக ஆன் மேரி ட்ரெவெல்யன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 25 ஆம் திகதி தென்னாசியாவிற்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் பிரபு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது இது குறித்த கரிசனையை வெளியிட்டிருந்ததையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |