பிரித்தானிய உளவுத்துறை முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவின் வெளிநாட்டு உளவுத்துறை MI6, ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் உள்ள தகவல் வழங்குபவர்களிடமிருந்து பாதுகாப்பாக உளவுத் தகவல்கள் பெற புதிய டார்க் வெப் தளத்தை தொடங்கியுள்ளது.
இந்த தளத்திற்கு “Silent Courier” என பெயரிடப்பட்டுள்ளது.
நோக்கம்
இதன் மூலம் பயங்கரவாதம் மற்றும் எதிரி நாடுகளின் உளவுத்துறை நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறுவதே நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
Image Credit: Grey Dynamics
தளத்தை அணுக, பயனர்கள் Tor எனப்படும் பாதுகாப்பான உலாவியைப் பயன்படுத்தவேண்டும், தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் சாதனங்களை அடையாளம் தெரியாதவாறு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கை
அத்துடன், Tor அணுக முடியாத தடை செய்யப்பட்ட இடங்களில் VPN பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முயற்சியால் தகவல் வழங்குபவர்கள் எந்தவித ஆபத்தும் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image Credit:
Stratix Systems
தற்போதைய சர்வதேச சூழலில், ரஷ்யா மற்றும் பிற நாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலையில், இது முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை என்று வலியுறுத்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
