பிரித்தானிய தலைமைத்துவ போட்டியில் ஆக்ரோசம்! ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் மோதலால் கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சி
தலைமைத்துவ போட்டியில் ஆக்ரோசம்
பிரித்தானியாவின் பிரதமராக வருவதற்கான போட்டியில் நிற்கும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் தமக்கு இடையில் இடம்பெற்ற விவாதத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டமை கட்சி உறுப்பினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெற்று வருகிறது.
பல சுற்று வாக்கெடுப்புகள்

இதில் கட்சி எம்.பிக்களிடம் பல சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு வாக்கெடுப்பின் போதும் குறைவான ஆதரவை பெறுபவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில்,அண்மையில் நடத்தப்பட்ட இறுதி வாக்கெடுப்பில் அதிக எம்.பி.க்களின் ஆதரவை பெற்று இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவர் மட்டுமே களத்தில் உள்ளனர்.
| சட்டவிரோத குடியேறிகளின் பிரித்தானிய வருகை - புதிய பிரதமர் வேட்பாளர்கள் அளித்துள்ள உறுதிமொழி |
தற்போது இவர்களில் ஒருவரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். பிரித்தானியா முழுவதும் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக்கட்சியின் உறுப்பினர்களிடம் இதற்கான வாக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளது.