இந்தியா - கனடா மோதலைக் குறைக்க ஆலோசனை
இந்தியாவுடனான மோதல் போக்கை தவிர்க்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா மீது குற்றம்சாட்டிய விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டன.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார்.
இதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் நிலை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கினார்.
அப்போது, ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் இறையாண்மையையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்க வேண்டும் என்றும், வியன்னா தீர்மானங்களை ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
தற்போதுள்ள நிலை தணியும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் ரிஷி சுனக், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கனடா பிரதமரை தொடர்பு கொள்வதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்
